ஓசூரில்பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு; டிரைவரை தாக்கியவர் கைது
ஓசூர்
கர்நாடக மாநிலம் தார்வார்ட் பகுதியை சேர்ந்தவர் இப்தகார் அகமது (வயது49). அதே பகுதியை சேர்ந்தவர் கமாரலி கதிபா (39). இவர்கள் 2 பேரும், ஓசூர் அருகே குமுதேப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இப்தகர் அகமது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கமாரலி கதிபாவிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை இருந்தது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கமரலி கதிபா, இப்தகர்அகமதுவை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து கமரலி கதிபாவை கைது செய்தனர்.