வியாபாரியை தாக்கியவர் கைது


சாத்தான்குளத்தில் வியாபாரியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம அருகே உள்ள விஜயராமபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சுயம்புத்துரை (வயது 53). வியாபாரி. இவர் சாத்தான்குளத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் விஜயராமபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி (53) என்பவருக்கு கடந்த ஆண்டு கோவிலுக்கு நன்கொடையாக கேட்ட ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாத்தான்குளம் தச்சமொழி மதுபானக்கடை அருகில் சுயம்புதுரை வந்தபோது ஆறுமுகபாண்டி, விஜயராமபுரத்தை சேர்ந்த ராமன் (எ) ராமகிருஷ்ணன் (43) ஆகியோர் வழிமறித்து பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றியதில் ஆறுமுகபாண்டி, ராமன் ஆகிய இருவரும் சேர்ந்து சுயம்புதுரையை தாக்கினர். இதில் காயமடைந்த சுயம்புதுரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குபதிவு செய்து ஆறுமுகபாண்டியை நேற்று கைது செய்தார். தலைமறைவாக உள்ள ராமனை போலீசார் தேடி வருகின்றார்.


Next Story