வீடுகளில் புகுந்து திருடியவர் கைது


வீடுகளில் புகுந்து திருடியவர் கைது
x

வீடுகளில் புகுந்து திருடியவரை அம்பை போலீசார் கைது செய்து ரூ.48 லட்சம் நகைகளை மீட்டனர்

திருநெல்வேலி

அம்பை:

வீடுகளில் புகுந்து திருடியவரை அம்பை போலீசார் கைது செய்து ரூ.48 லட்சம் நகைகளை மீட்டனர்.

திருட்டு

நெல்லை மாவட்டம் அம்பை பண்ணை சங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுமார் 55 பவுன் நகைகள் திருட்டு போனது. மேலும் சின்ன சங்கரன்கோவில் ரோடு சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த ரூபினா பர்வீன் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதவி சூப்பிரண்டு பல்வீர்சிங் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி திருடனை தேடி வந்தனர்.

கைது

விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முகிலன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அய்யாப்பழம் மகன் சுடலைப்பழம் (வயது 44) இந்த திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று காலை அம்பை ெரயில் நிலையம் அருகில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மேலும் பல வீடுகளில் திருடியது தெரியவந்தது.

அவரிடமிருந்து 131 பவுன் தங்க நகைகள் மற்றும் 536 கிராம் வெள்ளி நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.48 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சுடலைப்பழம் மீது நெல்லை மாவட்டத்தில் 17 திருட்டு வழக்குகளும், கோவில்பட்டியில் 4 திருட்டு வழக்குகள் உள்பட தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவரை போலீசார் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story