கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
x

திசையன்விளையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 27). இவர் சம்பவத்தன்று அங்குள்ள தாடகை அம்மன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடினார். இதனைப் பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து திசையன்விளை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா பொன்பாண்டி அளித்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தார். அவரிடம் இருந்து உண்டியலில் திருடப்பட்ட ரூ.1,128 மீட்கப்பட்டது.



Next Story