மனைவியை வீட்டை விட்டு துரத்தியவர் கைது


மனைவியை வீட்டை விட்டு துரத்தியவர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே மனைவியை வீட்டை விட்டு துரத்தியவர் கைது

கடலூர்

கடலூர்

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆதிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வினோத்குமார்(வயது 39). இவரது மனைவி பாக்கியலட்சுமி(36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். வினோத்குமார் தனது குடும்பத்துடன் கடலூர் அருகே குமாரப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வினோத்குமார் தனது தந்தை ராஜேந்திரன், தாய் அமுதா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பாக்கியலட்சுமியிடம் இருந்து 10 பவுன் நகைகளை வாங்கிக்கொண்டு அவரை தாக்கி வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன், அமுதா உள்ளிட்ட 5 பேர் மீது கடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story