தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டியவர் கைது


தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டியவர் கைது
x

தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டியவர் கைது

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே பூந்தோப்பு ஆலுவிளையை சேர்ந்தவர் நெல்சன் (வயது 60). இவருடைய வீட்டின் அருகில் வசிப்பவர் வில்சன் (65). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். வில்சன் மது குடித்து விட்டு அடிக்கடி நெல்சனிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவில் நெல்சன் வீட்டில் இருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த வில்சன், மண்வெட்டியால் நெல்சனின் கால்களில் வெட்டி கீழே தள்ளி மிதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த நெல்சன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட வில்சன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர், படுகாயமடைந்த நெல்சன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கபெருமாள் வழக்குப்பதிவு செய்து வில்சனை கைது செய்தனர்.


Next Story