போடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது
போடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி
போடி அருகே உள்ள ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையோரமாக நின்றிருந்த சைக்கிள் மீது முத்துராஜின் கை பட்டுள்ளது. இதில் அந்த சைக்கிள் கீழே விழுந்தது. இதனை பார்த்த சைக்கிள் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன் (43) என்பவர், சைக்கிளை ஏன் தள்ளிவிட்டீர்கள் என்று கேட்டு தகராறு செய்தார்.
மேலும் ஆத்திரமடைந்த அவர், முத்துராஜை தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முத்துராஜ் கொடுத்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புச்செல்வனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story