மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியவர் கைது


மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியவர் கைது
x

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை காமராஜர்நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் டியூக் துரைராஜ் (வயது 47). இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவரிடம் நடுவக்குறிச்சியை சேர்ந்த ஜேசுராஜ் மகன் மரியராஜ் (22), பாளையங்கோட்டையை சேர்ந்த மோசஸ் பிரபாகர் ஆகியோர் வேலை பார்த்தது தொடர்பாக சம்பளம் வாங்க டியூக் துரைராஜ் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்குள் சம்பளம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மரியராஜ், மோசஸ் பிரபாகர் ஆகியோர் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி, டியூக் துரைராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மரியராஜை கைது செய்தார். மோசஸ் பிரபாகரை தேடி வருகிறார்.


Next Story