தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது


தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
x

களக்காடு அருகே தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தாமோதரன் (வயது 45). தொழிலாளியான இவர் நேற்று அங்குள்ள அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முருகன் (44), தாமோதரனிடம் மது அருந்த பணம் தருமாறு கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த முருகன் கத்தியால் தாமோதரனை குத்தினார். இதில் காயமடைந்த தாமோதரன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர்.


Next Story