காரில் சென்று ஆடுகளை திருடியவர் கைது


தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலத்தம்பாடி அருகே காரில் சென்று ஆடுகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

ஆலத்தம்பாடி:

ஆலத்தம்பாடி அருகே காரில் சென்று ஆடுகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

ஆடுகள் திருட்டு

திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலத்தம்பாடி அருகே திருத்தங்கூர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டுப்போனதாக ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் சிங்கமுத்து மகன் ரோகன்(வயது24) என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

வியாபாரிகள் பிடித்தனர்

இந்த நிலையில் திருத்தங்கூர் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் திருவோணம் சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த அழகப்பன் (54) என்பவரிடம் ஆடுகளை வாங்கி உள்ளார். அப்போது அந்த ஆடுகள் திருட்டுப்போன ரோகனின் ஆடுகளை போல் இருந்துள்ளது.

இதை தொடர்ந்து அழகப்பனை பிடித்த வியாபாரிகள், அவரது கார் மற்றும் 2 ஆடுகளையும் ஆலிவலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அழகப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருத்தங்கூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆடுகளை காரி சென்று திருடி திருவோணம் சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

கைது

இதை தொடர்ந்து அழகப்பனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து காரையும், 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அழகப்பன் மீது பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்கு உள்ளது.


Next Story