வேலை பார்த்த வீட்டில் நகை திருடியவர் கைது
வேலை பார்த்த வீட்டில் நகை திருடியவர் கைது
கன்னியாகுமரி
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள மாங்கரை கிணத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் வின்ஸ் லாரன்ஸ் (வயது 42). இவருடைய வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்காரராக மாங்கரை தாணிக்கோட்டவிளையை சேர்ந்த அருள் என்ற அருண் (38) இருந்தார். சம்பவத்தன்று வின்ஸ் லாரன்ஸின் மனைவி ஒரு திருமண வீட்டிற்கு செல்வதற்காக பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தார். அப்போது நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கணவர் வின்ஸ் லாரன்சிடம் கூறினார். அவர் சந்தேகத்தின் பேரில் அருணை அழைத்து விசாரித்தார். அப்போது, அருண் பீரோவில் இருந்த நகைகளை சிறுக சிறுக திருடியது தெரியவந்தது. இதுகுறித்து வின்ஸ் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் என்ற அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story