கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது


கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே கோவில் உண்டியலில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே வேம்பார் அக்கரை சுடலை மாநகர் பகுதியில் காந்திமதி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோவில் பூட்டை மா்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் பூசாரி வேம்பார் பகுதியைச் சேர்ந்த அன்னக்காந்தி (வயது 55) என்பவர் சூரங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூத்துக்குடி அருகே உள்ள வாலசமுத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் முத்துராமன் (31) என்பவர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ரூ.30 ஆயிரத்தை மீட்டனர். மேலும் அவர் மீது சூரங்குடி போலீசில் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும் உள்ளது.


Next Story