கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
நெல்லை அருகே கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 48). இவர் ஆரைகுளம் பள்ளிக்கூடம் அருகே உள்ள இசக்கியம்மன் கோவில் நிர்வாகியாக உள்ளார். இவர் கடந்த 19-ந்தேதி கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவிலின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியல் பணத்தை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து தர்மராஜ் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அம்பலவாசக தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (27) என்பவர் உண்டியலில் பணம் திருடியது தெரியவந்தது. அதேபோல் மேல முன்னீர்பள்ளம் இசக்கியம்மன் கோவிலிலும் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பேச்சிமுத்துவை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story