கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் வண்டி மாடசாமி கோவில் தெருவில் முத்தாட்சியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து கோவில் நிர்வாகி இசக்கி, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் விக்கிரமசிங்கபுரம் வைத்தியலிங்கபுரம் தெருவை சேர்ந்த தங்கபாண்டி (24) என்பவர் உண்டியல் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்
Related Tags :
Next Story