பெண்ணிடம் நகை பறித்தவர் பிடிபட்டார்


பெண்ணிடம் நகை பறித்தவர் பிடிபட்டார்
x

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்தவர் பிடிபட்டார்

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகமணி (வயது 57). இவருடைய கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர் வீட்டில் தனியாக இருந்து வருகிறார். அவரது வீட்டிற்கு பின்புறம் பிரபு (36) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கனகமணி வீட்டில் உள்ள பூஜை அறைக்கு சென்றார். அதை நோட்டமிட்ட பிரபு வீட்டின் பூஜை அறைக்குள் நைசாக நுழைந்தார். பின்னர் அவர் கனகமணியை தாக்கினார். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி, 2 கைகளையும் துண்டால் கட்டினார். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 4 பவுன் நகை, காதில் அணிந்திருந்த 3 கிராம் தோடு ஆகியவற்றை பிரபு பறித்து சென்றார். இதையடுத்து அவரது உறவினர்கள் கனகமணியை மீட்டு தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கனகமணி வைகை அணை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story