கோவிலில் உண்டியல் திருடியவர் கைது


கோவிலில் உண்டியல் திருடியவர் கைது
x

நெல்லை அருகே கோவிலில் உண்டியல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே மேலூர் கீழநத்தம் பகுதியில் சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் உண்டியலை சம்பவத்தன்று மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகியான அதே பகுதியை சேர்ந்த கோபால், தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலபாலாமடையை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ் (வயது 20) என்பவர் உண்டியல் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story