பணம் கேட்டு மிரட்டியவர் கைது
பேட்டையில் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி கொண்டா நகரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஆறுமுகம் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணையா மகன் இசக்கிப்பாண்டி என்ற பாண்டி (24). நேற்று காலை ஆறுமுகம் கொண்டாநகரம் விலக்கு பஸ்நிறுத்தம் அருகே நெல்லை சந்திப்புக்கு செல்வதற்காக பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிப்பாண்டி, ஆறுமுகத்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் மறுக்கவே சட்டைப்பையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து ஆறுமுகம், சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து இசக்கிப்பாண்டியை கைது செய்தார்.
Related Tags :
Next Story