போலீசாரை மிரட்டியவர் கைது
களக்காடு அருகே போலீசாரை மிரட்டியவரை கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அமலன் மற்றும் போலீசார் களக்காடு-நாங்குநேரி பிரதான சாலையில் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்குபையுடன் நின்ற இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதைக் கண்ட போலீசார் இருவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். இதனைதொடர்ந்து இருவரும் மதுபாட்டில்களை காட்டி அருகில் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். எனினும் போலீசார் ஒருவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது 36) என்பதும், தப்பி ஓடியவர் கோவில்பத்தை சேர்ந்த ரத்தினகுமார் என்பது, 2 பேரும் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுந்தரபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விசாரணை நடத்தி தப்பி ஓடிய ரத்தினகுமாரை தேடி வருகிறார்.