வாலிபரை மிரட்டியவர் கைது
மயிலாடுதுறையில் வாலிபரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை அருகே நல்லத்துகுடி மேலத்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ரஞ்சித் (வயது 23). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ரஞ்சித், மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த ரவி மகன் சதீஷ்குமார் (30) என்பவரிடம் கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் பணம் கொடுக்காமல் மது வாங்கி வா என்று மிரட்டி உள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்றும் தன்னால் மது வாங்கி தர முடியாது என்றும் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்துக்காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.