ஒர்க்ஷாப் உரிமையாளரை மிரட்டியவர் கைது
தக்கலை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளரை மிரட்டியவர் கைது
கன்னியாகுமரி
தக்கலை,
இரணியல் அருகே உள்ள ஆத்திவிளையை ேசர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது47). இவர் இரணியல் சாலையில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் மேக்காமண்டபத்திற்கு புறப்பட்டார். மணலி ஆற்றுப் பாலத்தில் சென்ற போது நண்பர் செல்போனில் அழைத்ததால் செல்போனை எடுத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜோஸ் (48) என்பவர், 'நான் மது விற்பதை போலீசுக்கு நீ தான் தகவல் கூறுகிறாயா?' என கேட்டு மதுபாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இ்துகுறித்து ஸ்ரீனிவாசன் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் வழக்குப்பதிவு செய்து ஜோசை கைது செய்தார்.
Related Tags :
Next Story