மார்த்தாண்டம் அருகே நன்னடத்தையில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் சிறையில் அடைப்பு


மார்த்தாண்டம் அருகே  நன்னடத்தையில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் சிறையில் அடைப்பு
x
கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே பாகோடு மதில்தாணிவிளையை சேர்ந்தவர் சுகுமாரன் மகன் சுனில்குமார் (வயது 32). இவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய தொடர் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் நன்னடத்தை ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால், ஜாமீனில் வெளியே வந்த சுனில்குமார் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் இதுபற்றி பத்மநாபபுரம் சப்-கலெக்டருக்கு தெரியப்படுத்தினார். அதை தொடர்ந்து சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை சுனில்குமாருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனை காலத்தில் அனுபவித்தது போக மீதமிருந்த 5 மாதத்தை தண்டனை காலமாக சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் நேற்று சுனில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story