மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 May 2023 12:30 AM IST (Updated: 24 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் கனகு தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், ராமசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னத்துரை, பழனிசாமி, இளையபாரதி, இஸ்மாயில், சக்திவேல், முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் வில்வாதம்பட்டி, பாறைப்பட்டி, தும்பலபட்டி, தொப்பம்பட்டி, சின்ன வேலம்பட்டி, திருவண்டாபுரம், சண்முகவலசு, கே.வேலூர் மற்றும் கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோஷமிட்டனர். இதையடுத்து பழனி மண்டல துணை தாசில்தார் சஞ்சய் காந்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பயனாளிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் புளியம்பட்டி, தும்பலப்பட்டி, வாகரை, சண்முக வலசு ஆகிய ஊர்களில் ஆய்வு செய்து, வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story