மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2023 2:31 AM IST (Updated: 9 Jun 2023 4:59 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் தாசில்தார் அலுவலகம் மு்ன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நகர செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். பாபநாசம் தாலுகா குப்பைமேடு பகுதியில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் சுகாதார வளாகத்துடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டி தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினருடன் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாக கூறியதின் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்ட குழு உறுப்பினர் காதர்உசேன், ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாதர் சங்க செயலாளர் சாந்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story