அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆயக்காரன்புலம் பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம், வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு கிளை செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகிகள் அம்பிகாபதி, வெற்றியழகன், இளைய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கிராமத்திற்கு

கொள்ளிடம் கூட்டு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மலையான் குத்தகை, புதுத்தெரு மயான சாலைகளை செப்பனிட்டு தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story