தமிழக கவர்னரை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக கவர்னரை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழக கவர்னரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்,

மாமேதை காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்ததாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் பேசியதாகவும், அதை கண்டித்து சேலம் ராமகிருஷ்ணா பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.



Next Story