ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அரிசி கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, உதயகுமார், வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார், மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கள்ள மார்க்கெட்டில் ரேஷன் அரிசியை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கடத்தும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.