கொத்தனார் பலி
மோட்டார்சைக்கிள்- கார் மோதல்; கொத்தனார் இறந்தார்
மானூர்:
ஆலங்குளம் அருகே உள்ள பண்டாரக்குளத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் பேச்சிமுத்து (வயது 20). நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி போலீஸ் காலனியில் தங்கி இருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார்சைக்கிளில் போலீஸ் காலனி கல்யாண மண்டபம் அருகே நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பேச்சிமுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி பேச்சிமுத்துவின் அண்ணன் மாரிசெல்வம் கொடுத்த புகாரின் பேரில் மானூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பு பிரகாஷ் விசாரித்தார். காரை ஓட்டி வந்த சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ஞானக்கண் மகன் ஜெபசிங் (33) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.