ஏரியில் மூழ்கி கொத்தனார் சாவு


ஏரியில் மூழ்கி கொத்தனார் சாவு
x

கொண்டலாம்பட்டி அருகே ஏரியில் மூழ்கி கொத்தனார் இறந்தார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

கொண்டலாம்பட்டி அருகே உள்ள பனங்காடு ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மிதந்தவர், புத்தூர் அருகே உள்ள கணவாய் காடு பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 45) என்பதும், கொத்தனாராக வேலை பார்த்து வந்த அவர், மீன் பிடிப்பதற்காக பனங்காடு ஏரிக்கு சென்ற போது தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story