ராட்சத அலையில் சிக்கி கொத்தனார் பலி


ராட்சத அலையில் சிக்கி கொத்தனார் பலி
x

வேளாங்கண்ணியில் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி கொத்தனார் பலியானாா்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

பெங்களூரு பொட்டனா நகர் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டின்(வயது 41). கொத்தனார் வேலை செய்து வந்த இவர் நேற்று காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அவர் கடலில் குளித்துள்ளார். அப்போது எழுந்த ராட்ச அலை செபாஸ்டினை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் அவர் கடலில் மூழ்கி மாயமானார். சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செபாஸ்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story