விஷ வண்டுகள் கொட்டி கொத்தனார் சாவு
திருவட்டார் அருகே மரக்கிளையை வெட்ட முயன்றபோது விஷ வண்டுகள் கொட்டி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே மரக்கிளையை வெட்ட முயன்றபோது விஷ வண்டுகள் கொட்டி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
கொத்தனார்
திருவட்டார் அருகே உள்ள மாத்தார் கொசவன் பிலா விளையை சேர்ந்தவர் கிறிஸ்து ராஜ் (வயது 53). கொத்தனார். இவருடைய மனைவி சாந்தகுமாரி. இவர்களுக்கு ஸ்டாலின் (27), சலீன் (23) என்ற மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கிறிஸ்ராஜ் தனது தம்பி ரூப்பஸ் வீட்டின் மாடியில் ரப்பர் மரத்தின் கிளைகள் சாய்ந்து கிடந்தது. அதை வெட்டி அகற்றுவதற்காக சென்றார். அந்த மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. இதை கவனிக்காமல் மரக்கிளையை வெட்டினார். அப்போது கூட்டில் இருந்து கலைந்த விஷ வண்டுகள் வெளியேறி கிறிஸ்து ராஜை கொட்டியது.
சாவு
இதனால் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் கிறிஸ்துராஜ் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கிறிஸ்துராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவத்தை தொடர்ந்து குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விஷ வண்டுகள் கட்டியிருந்த கூட்டை தீயிட்டு அழித்தனர்.