சுடுகாட்டு சுவரில் அமர்ந்திருந்த மேஸ்திரி தவறி விழுந்து சாவு


சுடுகாட்டு சுவரில் அமர்ந்திருந்த மேஸ்திரி தவறி விழுந்து இறந்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் பீர்கான் (வயது 36). இவர் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துத்திப்பட்டு சுடுகாட்டில் இருந்த சுவர் மீது அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுவரில் இருந்து பின்னால் பள்ளத்தில் விழுந்ததாக தெரிகிறது.உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார், பீர்கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story