விதவையிடம் ஆபாசமாக பேசிய விவகாரம்: கிராம நிர்வாக அலுவலர் மீது வழக்கு


விதவையிடம் ஆபாசமாக பேசிய விவகாரம்:  கிராம நிர்வாக அலுவலர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விதவையிடம் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடா்பாக கிராம நிர்வாக அலுவலர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கடலூர்

புதுப்பேட்டை,

கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்துள்ள ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் 47 வயதுடைய பெண். இவருடைய கணவர் இறந்து விட்டதால், தனது 2 குழந்தைகளுடன், எம்.ஏரிப்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த பெண், தனது கணவரின் இறப்பு சான்றிதழ் சம்பந்தமாக பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். பின்னர் அவர், இது சம்பந்தமாக ஒறையூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலத்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் விதவை பெண் என்று அறிந்ததும் அவரிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியுள்ளார். இதுசம்பந்தமான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் மீது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story