மாணவி தாக்கப்பட்ட விவகாரம்; முன்னாள் காதலன் கைது


மாணவி தாக்கப்பட்ட விவகாரம்; முன்னாள் காதலன் கைது
x

குளச்சல் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பிறந்த நாள் கொண்டாட்டம்

குளச்சல் அருகே சமீபத்தில் பங்களா வீட்டில் கல்லூரி மாணவி ஒருவர் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது கல்லூரி மாணவியின் முன்னாள் காதலன் பங்களா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

பின்னர் அவர் கல்லூரி மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் கல்லூரி மாணவியின் முன்னாள் காதலனை தேடி வந்தனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

முன்னாள் காதலன் கைது

இதற்கிடையே ஒரு வீட்டில் மது விருந்து நடந்ததாகவும், அங்கு மாணவிகளும், மாணவர்களும் நெருக்கமாக இருந்ததாகவும் என சமூக வலை தளத்தில் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஆடியோவில் பேசும் மாணவி, பங்களா வீட்டில் நான் மது விருந்து என நினைத்து சென்றேன். ஆனால் அங்கு மதுவுடன் ஆண் நண்பர்களும் இருந்தனர். அப்போது நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபமானதை தொடர்ந்து இதுதொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரி மாணவியை தாக்கிய முன்னாள் காதலன் அஸ்வின் அபினேஷை (வயது 24 )பார்வதிபுரத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story