அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 92.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 92.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 92.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
கலசபாக்கத்தில் பலத்த மழை
அக்னி ஸ்தலம் என்பதற்கு ஏற்ப திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் திருவண்ணாமலையில் வழக்கத்தைவிட அதிகமான அளவில் வெயில் அடிக்குமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பி வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும், மிதமான மழையும் பெய்து உள்ளது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 92.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
செய்யாறு-64, வந்தவாசி-46, போளூர்-33.2, ஜமுனாமரத்தூர்-20, சேத்துப்பட்டு-17, செங்கம்-7.4, வெம்பாக்கம்-7, ஆரணி-4.8.
இந்த நிலையில் நேற்று பகலில் திருவண்ணாமலையில் வெயில் அடித்தது. மதியத்திற்கு மேல் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பிற்பகல் 3.15 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.
செங்கம்
செங்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செங்கம், பரமனந்தல், குப்பநத்தம், புதுப்பாளையம், மேல்பள்ளிப்பட்டு, இறையூர், கொட்டகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
தொடர்ந்து நேற்றும் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
தூசி
தூசி கிராமத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காந்திநகர் தெருவில் தென்னை மரத்தின் மீது இடி விழுந்தது