தேசியக்கொடியை தலைகீழாக மேயர் ஏற்றியதால் பரபரப்பு
தேசியக்கொடியை தலைகீழாக மேயர் ஏற்றியதால் பரபரப்பு
கும்பகோணம்
கும்பகோணம் மாநகராட்சியில் தேசியக்கொடியை தலை கீழாக மேயர் சரவணன் ஏற்றியதால் பரபரப்பு ஏற்றபட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி
நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு வீடுகளில், கடைகளில் அனைவரும் தேசியக்கொடி ஏற்றி வைத்து கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக ேநற்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாநகர மேயர் சரவணன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக (பச்சை நிறம் மேலே இருக்கும்படி) பறந்தது.
வீடியோ வைரல்
இதனை பார்த்த துணைமேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட கட்சியினர், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தலை கீழாக ஏற்றப்பட்ட கொடியை கீழே இறக்கி சரி செய்தனர். பின்னர் மேயர் சரவணன் மீண்டு்ம் சரியாக கொடியை ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேசியக்கொடியை தலைகீழாக மேயர் ஏற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.