தார்சாலை அமைக்கும் பணியை மேயர் ஆய்வு


தார்சாலை அமைக்கும் பணியை மேயர் ஆய்வு
x

வேலூர் அழகிரிநகரில் தார்சாலை அமைக்கும் பணியை மேயர் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் பகுதிகளில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அலமேலுமங்காபுரம் அழகிரிநகர் பேங்க்மேன் காலனியில் உள்ள தெருக்களில் தார்சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் சுஜாதா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசின் உத்தரவுப்படி ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு தார்சாலை அமைக்கப்பட்டதா என்றும், குறிப்பிட்ட அளவில் புதிய சாலை போடப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நிலவரம், நிறைவடையும் காலம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். பின்னர் சாலை பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் தரமாக செய்து முடிக்கும்படி மேயர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாநகராட்சி கவுன்சிலர்கள் கணேஷ்சங்கர், ராஜேஸ்வரி, சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story