மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்
கோரிக்கைகளை நிைறவேற்றக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களை முழு நேர ஊழியராக்கிட வேண்டும். மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்கிட வேண்டும். வங்கிக்கணக்கில் மாத ஊதியத்தை ெசலுத்த வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் மணிமொழி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், தலைவர் மாலதி, பொருளாளர் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.