விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து ெகாண்டார்.
விருதுநகர்
விருதுநகர் டி.சி. கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 52). ஏலக்காய் வியாபாரியான இவர் பங்குச்சந்தையிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலில் ரூ.50 லட்சம்நஷ்டம் ஏற்பட்ட நிலையில் அருண்குமார் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டது. இதனால் மன வேதனையடைந்த அருண்குமார் ஏலக்காய் வியாபாரத்தில் நஷ்டமில்லை, பங்குச்சந்தையே நஷ்டத்திற்கு காரணம் இதற்கு நானே முழு பொறுப்பு என்று ஒரு தாளில் எழுதி வைத்துவிட்டு விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மனைவி கார்த்திகா அருண் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story