விஷம் குடித்து வியாபாரி தற்கொலை


விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
x

விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பழைய வெள்ளையாபுரம் சத்யாநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் மாரியப்பன் (வயது 40). இவர் ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்துள்ளார். இதில் மயங்கி கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மாரியப்பபன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து மாரியப்பனின் மனைவி காளீஸ்வரி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story