பால் வியாபாரி விஷம் குடித்து சாவு
வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழியில் பால் வியாபாரி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார். சீட்டுப்பணம் கிடைக்காத விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழியில் பால் வியாபாரி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார். சீட்டுப்பணம் கிடைக்காத விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பால் வியாபாரி
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி அக்ரஹார தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (வயது 52), பால் வியாபாரி.
இவர் நேற்று காலை வெள்ளாங்குழி அண்ணாநகர் பகுதியில் உள்ள பாறையில் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வீரவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தற்கொலை
பொன்னுதாஸ் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பொன்னுதாஸ் வீரவநல்லூரை அடுத்த உப்புவாணியமுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (48) என்பவரிடம் சீட்டுப்பணம் கட்டி வந்துள்ளார். இதில் பொன்னுதாசுக்கு சீட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை அவர் கேட்ட போது, மாரியப்பன் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தாா். சீட்டுப்பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த பொன்னுதாஸ் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வெள்ளாங்குழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.