மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பால்காரர் பலி


மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பால்காரர் பலி
x

பரமத்தி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பால்காரர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பால்காரர்

பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). பால்காரர். இவர் நேற்று மதியம் தனது மொபட்டில் காரைக்கால் பஸ் நிறுத்தம் அருகே நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கந்தசாமி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாகபலியானார்.

2 பேர் படுகாயம்

இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து படுகாயம் அடைந்த 2 பேரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் கந்தசாமியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பரமத்தி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே பல்காரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story