மினிவேன் தலைகீழாக கவிழ்ந்தது
செங்கம் அருகே மினிவேன் தலைகீழாக கவிழ்ந்தது
திருவண்ணாமலை
செங்கம்
செங்கம் அருகே புதுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று திறன் மேம்பாட்டு திருவிழா நடந்தது.
இதில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். மேலபுஞ்சை கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் மினிவேனில் மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
புதுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மினிவேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையின் அருகே இருந்த வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story