அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
அதிசய விநாயகர் கோவில்
வடக்கன்குளம் அதிசய விநாயகர், அம்பாள் தேவி, சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 5.30 மணிக்கு மேல் அதிசய விநாயகர் ரதவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதிகாலை, முற்பகல், வேளைகளில் தீபாராதனைகள், பாலாபிஷேகம், சந்தனகாப்பு, புஷ்பாஞ்சலி, லட்சார்ச்சனை நடக்கிறது.
தேரோட்டம்
7-ம் திருவிழாவான வருகிற 2-ந் தேதி மாலையில் சண்முகப் பெருமானுடன் நடராஜ பெருமானும் சிவப்பு சாத்தி வீதி பவனி வருதல், 3-ந் தேதி காலை 7 மணிக்கு சண்முகப் பெருமான் வெள்ளை சாத்தி உட்பிரகார பவனி வருதல், மாலையில் சண்முகர் தெய்வானை சமேதராய் பச்சை சாத்தி ரத வீதிகளில் பவனி வருதல் நடக்கிறது.
4-ந் தேதி மாலையில் சிவசுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளல், 10-ம் திருவிழாவான 5-ந் தேதி மாலையில் சிவசுப்பிரமணி சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கும் நிகழ்ச்சி, இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக அம்பாள் தேவியின் மின்னொளி அலங்கார தேரோட்டம் நடைபெறுகிறது.
10-ம் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு அதிசய விநாயகர் கோவில் மண்டபத்தில் வைத்து சிற்றுண்டி வழங்கப்படும்.
ஏற்பாடுகளை திருவிழா திருப்பணி குழு மற்றும் அதிசய விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.