வீட்டை சேதப்படுத்திய கும்பல்- வாலிபர் கைது


வீட்டை சேதப்படுத்திய கும்பல்-  வாலிபர் கைது
x

மூன்றடைப்பு அருகே வீட்டை சேதப்படுத்திய கும்பல் வாலிபர் கைது

திருநெல்வேலி

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள அ.சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 55). விவசாயி. இவரது மகன் திருமண விழா மூலைக்கரைப்பட்டியில் கடந்த 3-ந் தேதி நடந்தது. அப்போது திருமணத்திற்கு வந்த சிலர் கும்பலாக மண்டபத்தில் இருந்த சேர்களை எடுத்து வீசி ஜாலியாக விளையாடினராம். இதை இசக்கிபாண்டி மற்றும் திருமண வீட்டார் கண்டித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இதன்பின்னர் கடந்த 4-ந்் தேதி நள்ளிரவு அ.சாத்தான்குளம் கிராமத்திற்கு ஒரு கும்பல் சென்று இசக்கி பாண்டி மற்றும் அவரது உறவினர் வீட்டையும், பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து இசக்கி பாண்டி மற்றும் அவரது உறவினர் சண்முகவேல் ஆகியோர் தனித்தனியே மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 7 பேர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாணாங்குளத்தைச் சேர்ந்த அய்யப்பன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.


Next Story