அடகு கடையில் இருந்து அரை கிலோ நகையுடன் லாக்கரை தூக்கிச்சென்ற கும்பல்


அடகு கடையில் இருந்து அரை கிலோ நகையுடன் லாக்கரை தூக்கிச்சென்ற கும்பல்
x

மதுரையில் அடகு கடையில் இருந்து அரை கிலோ நகையுடன் லாக்கரை தூக்கி சென்ற கும்பல், அதை உடைக்க முடியாததால் குப்பை வண்டியில் வீசி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை

மதுரையில் அடகு கடையில் இருந்து அரை கிலோ நகையுடன் லாக்கரை தூக்கி சென்ற கும்பல், அதை உடைக்க முடியாததால் குப்பை வண்டியில் வீசி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடகுகடை லாக்கர்

மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் புதூர் ஜவஹர்புரம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு நகை வைக்கும் லாக்கர் பெட்டியை காணவில்லை. உடனே அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாக்கர் பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர்.

குப்பை வண்டியில் வீச்சு

இதற்கிடையில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை எடுக்க வந்தனர். அப்போது அங்கு ஒரு குப்பை வண்டியில் லாக்கர் பெட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த லாக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெட்டியை மீட்டு கடை உரிமையாளரிடம் கொடுத்தனர். அவர் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் அரை கிலோ நகை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் இருந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அடகு கடையில் கொள்ளையடிக்க வந்த ஆசாமிகள், லாக்கர் பெட்டியை உடைக்க முடியாததால் அதை வெளியே கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் அந்த பகுதியில் போலீசார் நடமாட்டம் இருந்ததையொட்டி அந்த பெட்டியை குப்பை வண்டியில் வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story