காரில் வைத்திருந்த பணம் மாயம்
சாத்தூர் அருகே காரில் வைத்திருந்த பணம் மாயமானது.
சாத்தூர்,
விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த முகமதுயூசுப் மகன் அப்துல்ரஹீம் (வயது 22). இவர் ஆவுடையாபுரத்தில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். தீப்பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் வாங்குவதற்காக ரூ.45 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தீப்பெட்டி குச்சி தயாரிக்கும் ஆலைக்கு அப்துல்ரஹீம், அவரது உறவினர் ஆகிய 2 பேரும் காரில் வந்தனர். அப்துல்ரஹீம் பணத்தை கைப்பையில் வைத்து காரில் வைத்துள்ளார். பின்னர் 2 பேரும் காரை விட்டு இறங்கி குச்சி ஆலை உரிமையாளரிடம் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீண்டும் ஆவுடையாபுரத்திற்கு வந்து விட்டனர். பின்னர் கைப்பையை பார்த்த போது அதில் இருந்த பணத்தை காணவில்லை. இதுகுறித்து அப்துல்ரஹீம் அளித்த புகாரின் ேபரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.