பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது
நெல்லை அருகே பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது.
திருநெல்வேலி
நெல்லை அருகே கங்கைகொண்டான் ஊருக்குள் புகுந்த குரங்கு அங்குள்ள தெரு நாய்களை கடித்தது. மேலும் மாணவ-மாணவிகளை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் முருகன் குரங்கை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வனவர் அழகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பூல் பாண்டி, கிட்டு, சரவணகுமார், முருகன் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் வனக் கால்நடை ஆய்வாளர் அர்னால்டு ஆகியோர் நேற்று கங்கைகொண்டான் பகுதிக்கு சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு தொந்தரவு செய்த குரங்கை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story