ஆம்புலன்ஸ் மீது மோதிய மொபட் தீப்பிடித்தது


ஆம்புலன்ஸ் மீது மோதிய மொபட் தீப்பிடித்தது
x

சிவகிரி அருகே ஆம்புலன்ஸ் மீது மோதிய மொபட் தீப்பிடித்தில் தொழிலாளி காயம் அடைந்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி கக்கன்ஜி தெருவைச் சேர்ந்தவர் ஜான் கென்னடி (வயது 50). கூலி தொழிலாளியான இவர் நேற்று காலையில் தனது மொபட்டில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி அருகே தொட்டிச்சி மலையாற்று பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னால் சென்ற 108 ஆம்புலன்ஸ் வேனின் பின்புறம் மொபட் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மொபட்டின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் காயமடைந்த ஜான் கென்னடியை சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுதொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story