மோட்டார் சைக்கிள் மோதி மின்கம்பம் சாய்ந்து விழுந்தது


மோட்டார் சைக்கிள் மோதி மின்கம்பம் சாய்ந்து விழுந்தது
x

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மின்கம்பத்தின் மீது மோதியது

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சிவராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35). டிரைவரான இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு சென்றுள்ளார்.

மேலக்காடு கிராமம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே ஓடிய ஆடு, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த சிமெண்டு மின்கம்பத்தின் மீது மோதியது.

சாய்ந்து விழுந்தது

இதில் மின்கம்பம் துண்டாகி சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பல மணி நேரம் மின்தடை

இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து புதிய கம்பம் அமைத்து மின்வினியோகம் வழங்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story