மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது; மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது; மூதாட்டி பலி
x

காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியானார்.

விருதுநகர்

காரியாபட்டி,

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் சித்தார்த்தன் (வயது 35). இவரது தாயார் ராசம்மாள் (72). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான மல்லாங்கிணறு சென்று பட்டா மாறுதல் விஷயமாக அதிகாரிகளை பார்த்து விட்டு மீண்டும் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் மதுரை சென்று கொண்டிருந்தனர். அப்போது காரியாபட்டி பைபாஸ் சாலையில் சித்தார்த்தன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ராசம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராசம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Related Tags :
Next Story